ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 12 பயனாளிகளுக்கு ரூ.80,280 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்கள், 4 பயனாளிகளுக்கு ரூ.29,120 மதிப்பில் தேய்ப்பு பெட்டிகள், தாட்கோ மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.11,42,088/- மதிப்பிலான உதவித் தொகைக்கான ஆணைகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் 243 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 48 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் 188 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 14 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான சமுதாய முதலீட்டு நிதிக்கான ஆணை என மொத்தம் 1,002 பயனாளிகளுக்கு ரூ.4.46 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ராணி ஸ்ரீகுமார் எம்பி., எம்எல்ஏக்கள் எஸ். பழனிநாடார், ஈ. ராஜா, சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக சமத்துவ நாள் உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் சீ. ஜெயச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கி. அன்னம்மாள், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவா் உதயகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.