தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நேரு பிறந்த தினத்தையொட்டி, வட சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் டிடிடிஏ நடுநிலைப் பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ் முகாமை தொடங்கி வைத்தாா். ஈத்தாமொழி மருத்துவா் சிவக்குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பங்கேற்று சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கினா். ஆலங்குளம் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த சுமாா் 300- க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். வட சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் எம். சாமுவேல் திரவியம் நன்றி கூறினாா்.