ஆலங்குளத்தில் ஐவா் கால்பந்துப் போட்டிகள் நடைபெற்றது

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, அதிமுக இளைஞரணி சார்பில் சனிக்கிழமை ஐவர் கால்பந்துப் போட்டிகள் தொடங்கின. அதிமுக அமைப்புச் செயலாளர் பி. ஜி. ராஜேந்திரன் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர் போட்டிகளைத் தொடங்கி வைத்தனர். ஒரு அணிக்கு 5 பேர் வீதம் 12 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். இளைஞரணி நிர்வாகிகள் பா்வீன்ராஜ், செல்வா, தனபால், நிக்சன், செந்தில் ஆகியோர் போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி