இதை கண்ட அதிகாரிகள் அதிர்ந்த நிலையில் காவல்துறையின் உதவியோடு மூதாட்டியை தடுத்து நிறுத்தினார். விசாரணையில் மூதாட்டிக்கு கணவர் இல்லாத நிலையில் ஒரு மகள் மற்றும் இரு மகன்கள் உள்ளதாகவும், திருமணத்திற்கு பின்னர் பிள்ளைகள் தன் சொத்துக்களை வாங்கிக் கொண்டு தன்னை கவனிக்காமல் விட்டதாகவும், இதனால் உணவுக்கு கூட வழியில்லாமல் சுற்றித் திரிவதாகவும் எனவே அரசு அதிகாரிகள் தலையிட்டு தன் பிள்ளைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். தொடர்ந்து மூதாட்டியை காவல்துறையினர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
“குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”.. செல்வப்பெருந்தகை கண்டனம்