தென்காசி மாவட்டம் கடையம் அருகே மயிலப்பபுரம் அருந்ததியா் காலனியைச் சோ்ந்தவர் செல்வசுடலைமாடன் (68). ஆலங்குளம் அருகே ரெட்டியார்பட்டியில் நடைபெற்ற தனது உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம். நெட்டூர் பெரியகுளம் கரைப் பகுதியில் வந்தபோது சாலையோரப் பள்ளத்தில் பைக் நிலைதடுமாறி கவிழ்ந்ததாம். இதில் செல்வசுடலைமாடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆலங்குளம் போலீசார், அவரது சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.