தென்காசி: செப்டிக்டேங்கில் விழுந்த மாடு; மீட்ட தீயணைப்புத் துறையினர் (VIDEO)

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வட்டம்நல்லூரைச் சேர்ந்த சீனிவாசன் என்ற விவசாயி அந்த பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது மாடு செப்டிக் டேங்க் மேல் ஏறியதால் உடைந்து பசுமாடு தவறி விழுந்தது. இதைக் கண்ட விவசாயி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று செப்டிக் டேங்கில் தவறி விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்டனர். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையினரை வெகுவாக பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி