பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; தென்காசி மாவட்டத்தில் தென்காசி அரசு தலைமை மருத்துவமனை, செங்கோட்டை அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் நூலகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கம் மேம்படும். மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் இந்நூலகத்தினை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர். எஸ். பழனிநாடார் எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.
இணைஇயக்குநர் (நலப்பணிகள்) பிரேமலதா, மாவட்ட நூலகர் சண்முகசுந்தரம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.