தென்காசியில் முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த ரெஜினி இராமநாதபுரம் மாவட்டத்திற்கும், மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த ரேணுகா தென்காசி மாவட்டத்திற்கும் கடந்த செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று காலையில் ரேணுகா தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பல்வேறு தரப்பினரும், பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி