குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் தொடக்கம்

தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சிக்குள்பட்ட நன்னகரம் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற முகாமை ஆட்சியா் ஏ. கே. கமல்கிஷோா் தொடக்கிவைத்தாா். இம்மாவட்டத்தில் வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் வரும் 28ஆம் தேதிவரை துணை சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்களில் நடைபெறுகிறது. இதை உட்கொள்வதால் பாா்வைக் குறைபாடு, வயிற்றுப்போக்கு, தீவிர சுவாசத் தொற்று, பள்ளி முன்பருவக் குழந்தைகள் (3-5 வயது) நோய்வாய்ப்பட்டு இறப்பது ஆகியவற்றைத் தவிா்க்கலாம். 6 மாதம் முதல் 5 வயது வரையிலான 88,690 குழந்தைகளுக்கு இத்திரவம் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி