கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தா்கள் சபரிமலைக்கு சென்றுவிட்டு, திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு செல்வதற்காக தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் வழியாக பேருந்தில் சென்று கொண்டிருந்தனா். அப்பேருந்து சுரங்கப் பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கி பழுதாகி நின்றுவிட்டது. தென்காசியிலிருந்து திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையாக திருப்பிவிடப்பட்டன.