பாவூா்சத்திரத்தில் தீ பற்றிய பைக் சேதமின்றி மீட்பு

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் திருநெல்வேலி தென்காசி நான்குவழிச் சாலை அருகே செல்வம் என்பவருக்குச் சொந்தமான பழைய பைக் விற்பனை செய்யும் கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக் திடீரென தீப்பிடித்தது. அப்போது அந்த வழியாக பணிக்குச் சென்ற சுரண்டை தீயணைப்பு நிலைய சிறப்பு நிலைய அலுவலா் பாலகிருஷ்ணன், உடனடியாக அருகிலிருந்த தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைத்து பைக்கை சேதமின்றி மீட்டாா். பொதுமக்கள் அவரது செயலைப் பாராட்டினா்.

தொடர்புடைய செய்தி