இதில், செங்கோட்டையை சேர்ந்த சங்கர் கணேஷ், 48, அம்பிகா, 40, சொக்கம்பட்டியை சேர்ந்த முருகம்மாள், 45, ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து, முதியோர் இல்லத்தில் உணவு சாப்பிட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உடல்நல பாதிப்பு அதிகம் உள்ள, 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை மதுரையை சேர்ந்த தனலட்சுமி, 70, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 8க்கும் அதிகமானோர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முதியோர் இல்ல நிர்வாகி தென்காசியை சேர்ந்த ராஜேந்திரனை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
அதிமுகவில் இன்று முதல் விருப்ப மனு