ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் சர்ச் தெருவில் உள்ள திருமண வீட்டில் வெள்ளிக்கிழமை மாலை விருந்து நடைபெற்றது. அப்போது முகமூடி அணிந்து வந்த 6 நபர்கள் அங்கிருந்த 6 பேரை ஓட ஓட துரத்தி வெட்டினர்.இதில் ரமேஷ் (46) அவரது மகன் அருண் மாறன் (22), காபிரியேல் மகன் ராயப்பன் (19), ஞானமுத்து மகன் மார்க்க ரமேஷ் (49), ஆய்க்குடி சேகர் மகன் ராம்குமார் (19), மேளக்கலைஞரான சாம்பவர் வடகரை பரமசிவன் மகன் மாடசாமி (19) ஆகியோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.