தென்காசி: திருவள்ளுவா் கழக திருக்குறள் விழாவில் ஆய்வரங்கம்

தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் 98ஆவது திருக்குறள் விழாவின் 2ஆவது நாளான புதன்கிழமை ஆய்வரங்கம் நடைபெற்றது. தென்காசி திருவள்ளுவர் கழக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, 'அமுதசுரபி' ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் தலைமை வகித்து 'யாமறிந்த புலவரிலே வள்ளுவரும், கம்பரும்' என்ற தலைப்பில் பேசினார். 

செங்கோட்டை விவேகானந்தன் வாழ்த்துப் பேசினார். 'யாமறிந்த புலவரிலே வள்ளுவரும் பாரதியாரும்' என்ற தலைப்பில் சேவாலயா முரளிதரன், 'வள்ளுவரும் இளங்கோவும்' என்ற தலைப்பில் ராஜாராம், 'வள்ளுவரும் ஒளவையாரும்' என்ற தலைப்பில் கு. பாஸ்கர் ஆகியோர் பேசினர். இந்த விழாவில் தென்காசி திருவள்ளுவர் கழகத் தலைவர் கனகசபாபதி, செயலாளர் தீத்தாரப்பன், கடையம் திருவள்ளுவர் கழகத் தலைவர் சேதுராமலிங்கம், இணைச் செயலர் சோமசுந்தரம், ஞானசுந்தரம், பேராசிரியர் ராமச்சந்திரன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி