தென்காசியில் நடைபெற்ற உணவு திருவிழா நிகழ்ச்சி

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் மாவட்ட அளவிலான உணவுத் திருவிழா தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீ குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த உணவுத் திருவிழாவில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரங்களிலும் வெற்றி பெற்றவர்கள் கலந்து கொண்டனர். 650-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் இந்த உணவுத் திருவிழாவில் காட்சிபடுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி