மேலும் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட வழக்குகள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் ஆராயப்பட்டு எதிர்காலத்தில் அதனை தவிர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய குற்ற வழக்குகளில் சிறப்பாக வாதாடி காவல் அதிகாரிகளுடன் துணைபுரிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர உறுதுணையாக இருந்த அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் உதவி அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கும், குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.