ஆலங்குளம் அருகே அரிவாள் வெட்டு.. 7 பேர் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூரில் திருமண வீட்டில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் புகுந்து அரிவாளால் வெட்டியதில் 6 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், நேற்றிரவு நெல்லையில் இதே கும்பல் அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி