திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மருதூர் ஊராட்சியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபாட்டிலுக்கு கூடுதலாக பணம் கேட்டுள்ளனர். இதனை வாடிக்கையாளர்கள் ஒருவர் தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த டாஸ்மாக் ஊழியர் அந்நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவருடன் வந்தவர் இதனை வீடியோ எடுத்ததால் அவரையும் டாஸ்மாக் ஊழியர்கள் ஆபாச வார்த்தைகளைக் கூறி, தாக்கி செல்போனை உடைத்துள்ளனர்.
நன்றி: தந்தி