தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும், பொதுமக்கள் புதிய கார்டு மற்றும் திருத்தங்களுக்கு TNPDS இணையதளம் வாயிலாக தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும் என கூறப்படுகிறது.