திருவண்ணாமலை கோயிலில் அமைக்கப்பட்ட தற்காலிக கடைகள் அகற்றம்

திருவண்ணாமலையில், நாளை (டிச.3) கார்த்திகை மகாதீபம் நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில் அங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சியில், பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து குவியவுள்ளனர். இந்நிலையில், பக்தர்கள் வசதிக்காக மாட வீதியில் அமைக்கப்பட்ட தற்காலிக ஆக்கிரமிப்புக் கடைகளை போலீசார் அகற்றி வருகின்றனர். இதனால், பல ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து கடைகள் வைத்த உரிமையாளர் வேதனையில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி