செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தகுதியற்ற நிலையில் இருந்த 66 பள்ளி வாகனங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 432 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் 30 வாகனங்கள் தகுதி இழந்துள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 304 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் 21 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன. ஸ்ரீபெரும்புதூரில் 15 பேருந்துகள் வேகக் கட்டுப்பாடு கருவி, அவசரகால கதவு, ரிவர்ஸ் கேமரா செயல்படாததால் நிராகரிக்கப்பட்டன.