3 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆலய ஊழியர்

சென்னையில் மூன்று சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆலய ஊழியர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அம்பத்தூரில் இயங்கி வரும் வானத்தின் வாசல் ஆலய ஊழியர் ஏசுதாஸ், 3 சிறுவர்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் குற்றம்சாட்டப்பட்ட ஆலய ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி