திருக்கோயில் பணியாளர்களின் திருமணக் கடன் ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் (ஆக., 21) புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் திருமணத்திற்காக வழங்கப்படும் கடன், முதுநிலை திருக்கோயில் பணியாளர்களுக்கு ரூ.2 லட்சமாகவும், முதுநிலை அல்லாத பணியாளர்களுக்கு ரூ.1 லட்சமாகவும் உயர்த்தப்படும் என கூறினார்.