மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஐஷ்பாக் ஸ்டேடியம் அருகே புதிதாக ஒரு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் 90 டிகிரியில் ஒரு கூர்மையான வளைவு அமைக்கப்பட்டு உள்ளதுதான் தற்போது நாடு முழுவதும் சர்ச்சையாகி உள்ளது. 'இந்த மேம்பாலம் 90 டிகிரி வளைவில் திரும்புவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது' என அம்மாநில பாஜக அரசுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளது. மேலும் , நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் டெம்பிள் ரன் விளையாட்டை நினைவூட்டுகிறது என தெரிவித்து வருகின்றனர்.