வடதமிழகத்தில் அடுத்த 2 வாரங்களுக்கு வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்றும், வெப்பநிலை 39 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக, முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நல குறைபாடு உள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நன்றி:தந்தி