பீகார் சட்டப்பேரவை தேர்தலையொட்டி, ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று (அக். 15) வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 1995-ம் ஆண்டு முதல் லாலு பிரசாத்தின் குடும்பம் மட்டுமே இந்த தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இந்த தேர்தலில், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இணைந்து அமைத்துள்ள 'மகாபந்தன்' கூட்டணிக்கு தேஜஸ்வி யாதவ் தலைமை தாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.