ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு.. லண்டன் பயணம் ரத்து

டெல்லியில் இருந்து இன்று (மார்ச் 26) லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானம் உடனடியாக டெல்லிக்கு திருப்பி விடப்பட்டு, டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது குறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. தற்போது விரிவான தொழில்நுட்ப சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

தொடர்புடைய செய்தி