ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய சேவைகளில் தொழில்நுட்பக் கோளாறு

ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய சேவைகளான ஐ-கிளவுட், ஆப் ஸ்டோர், ஆப்பிள் பே, ஆப்பிள் வாலட் மற்றும் ஆப்பிள் மியூசிக் ஆகியவற்றில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணக்குகளில் உள்நுழைவதிலும் கிளவுட் சேவைகளைப் பயன்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகப் பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது சைபர் தாக்குதல் இல்லை எனத் தெரிவித்துள்ள ஆப்பிள் நிறுவனம், கோளாறைச் சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕