டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துணை ராணுவப் படையினர் மீண்டும் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பிய நிலையில், பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்தினர்.
நன்றி: NewsTamilTV24x7