மாணவிகளை வீடியோ எடுத்து டார்ச்சர் செய்த ஆசிரியர் சஸ்பெண்ட்

திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு கணித ஆசிரியராக சுந்தரவடிவேலு (48) என்பவர் பணியாற்றி வந்த நிலையில் மாணவிகளை வீடியோ எடுத்து மோசமாக நடந்து கொண்டதாக கூறி, அவர்களின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் சுந்தரவடிவேலுவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி