அசாம்: பஜாலி மாவட்டத்தை சேர்ந்த கிஷோர் (57) அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியாக பணியாற்றி வந்தார். கிஷோருக்கும் அவர் மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் அண்மையில் ரயில் முன்னர் பாய்ந்து கிஷோர் தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்னர் அவர் எழுதிய கடிதத்தில் மனைவி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.