மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமனை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (செப்.27) பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், “தேர்தலில் வெற்றிப் பெற்ற பிறகு ராஜினாமா செய்து, மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுபவர்களுக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். இந்த தேர்தலால் மக்களின் வரிப்பணம் தேவையில்லாமல் செலவாகிறது. வெற்றிப் பெற வாக்களித்த மக்களை மீண்டும் தேர்தலை சந்திக்க வைப்பது சரியல்ல” என்றார்.