உலகின் 'நம்பர் 1' பணக்கார பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட் உள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு, கடந்த 2 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தற்போது $2.1 பில்லியனாக (இந்திய மதிப்பில் ரூ.18,450 கோடி) அதிகரித்துள்ளதாக தெரிகிறது. டெய்லர் ஸ்விஃப்ட்டின் Eras Tour இசை நிகழ்ச்சிகள் மற்றும் சமீபத்தில் வெளியான 'The Life of a Showgirl' ஆல்பமால், சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.