தட்கல் டிக்கெட் முன்பதிவு: கவுண்டர், ஆன்லைனில் OTP கட்டாயம்

ரயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவு முறையில் முறைகேடுகளை தவிர்க்கும் பொருட்டு, ஆன்லைன் மற்றும் முன்பதிவு கவுண்டர்கள் என இரண்டிலும் இனி ஓடிபி (OTP) முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, பயணிகள் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ரகசிய குறியீட்டை பகிர்ந்தால் மட்டுமே முன்பதிவை உறுதி செய்ய முடியும். எனவே, தட்கல் டிக்கெட் எடுக்க செல்லும் பயணிகள் தங்களது மொபைல் போனை உடன் வைத்திருப்பது அவசியமாகும்.

தொடர்புடைய செய்தி