சென்னை புறநகர்ப் பகுதிகளான குன்றத்தூர், திருமுடிவாக்கத்தில் டாஸ்மாக் கடைகள் 3 மணி நேரத்திற்கும் மேலாக மூடப்பட்டு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாட்டிலுக்கு ரூ.10 வசூலிப்பதைத் தடுக்கும் நடவடிக்கையால் ஏற்படும் செலவினங்களை நிர்வாகமே ஏற்க வேண்டும் எனவும், காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் உள்ள முறைகேடுகளைச் சரிசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி இக்கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
நன்றி: நியூஸ் 18