சென்னையில் SNJ, Kals, Accord, SAIFL, SHIVA உள்ளிட்ட மதுபான ஆலைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் டாஸ்மாக்கில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், டாஸ்மாக் உயர் மதுபான அதிகாரிகள் இடையே நேரடி நிறுவனங்கள் தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளது. டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர் களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.