கோரிக்கைகள் நிறைவேறாததால் டாஸ்மாக் பணியாளர்கள் நாளை முதல் போராட்டம்

அரசு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததை கண்டித்து, நாளை (மார்ச்.7) முதல் சென்னையில் டாஸ்மாக் பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்குகின்றனர். கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைப்பதில் தாமதம் ஏற்படுவதால் அதிருப்தியடைந்துள்ள பணியாளர்கள், எழும்பூரில் உள்ள நிர்வாக இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளனர். உரிய தீர்வு கிடைக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் எனத் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

தொடர்புடைய செய்தி