ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவிருப்பதாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவித்துள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 9ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளது. டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது அரசு விரைந்து தீர்வு காண வேண்டும். இல்லையென்றால், அக். 2ம் தேதி காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை துவங்குவோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி