பாட்டிலுக்கு ரூ.10 தரமறுத்து டாஸ்மாக் ஊழியருக்கு செருப்படி

சேலம் மேச்சேரியை சேர்ந்தவர் சற்குணம். இவர் ஆத்துக்காடு டாஸ்மாக்கில் விற்பனையாளராக உள்ளார். நேற்று உத்தமசோழபுரத்தை சேர்ந்த சீனிவாசன் (70) மதுபாட்டில் வாங்கியுள்ளார். பாட்டிலை திரும்ப பெறுவதற்கான ரூ.10 ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. ஆனால் பாட்டிலுக்கான ரூ.140 மட்டும் தான் தருவேன், ஸ்டிக்கருக்கு பணம் தர மாட்டேன் என கூறிய முதியவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் தகராறு ஏற்பட்டது. உடனே சீனிவாசன் திடீரென செருப்பை கழற்றி சற்குணத்தை தாக்கினார். அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி