சென்னை டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திருப்பி ஒப்படைக்க உத்தரவிட்டும், அதை மீறி நடவடிக்கை எடுத்ததாக கூறி, ED அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ED மேல் முறையீட்டு ஆணைய தலைவர் பிரதீப் குமார் உள்ளிட்டோருக்கு நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் தொடர்புடைய அரசியல் புள்ளிகள், சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், உள்ளிட்டோரது இடங்களில் சோதனை நடத்தப்பட்டிருந்தது.