2.0-வில் ஐந்து லட்சம் வீடுகள் இலக்கு - முதலமைச்சர் ஸ்டாலின்

திராவிட மாடல் 2.0-வில் ஐந்து லட்சம் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று (மார்ச் 15) மாலை அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், பல்வேறு திட்டங்கள் குறித்து திமுக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், '3 லட்சம் கலைஞர் கனவு இல்லங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறோம்! #DravidianModel 2.0-வில் ஐந்து லட்சம் வீடுகள் இலக்கு' என்று எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி