திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள வெல்டிங் கடையில் இருந்த காலியான பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில், அருகிலிருந்த கடைகள் பலத்த சேதமடைந்தன. டேங்கரில் எரிபொருள் இல்லாததால் பெரிய தீ விபத்து தவிர்க்கப்பட்ட போதிலும், விபத்தின் அதிர்ச்சியில் அருகிலிருந்த உணவகத்தில் வேலை செய்த நான்கு தொழிலாளர்களுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பு குறைபாடுகளே இந்த விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நன்றி:PT