உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்

காவிரி உரிமைப் போராட்டம் குறித்துப் பேசுகையில் CM விஜயை நாகரிகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் விமர்சனத்தில் சிந்தனைத் தூய்மையும் பேச்சு நாகரிகமும் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், சிறை செல்வதையும் ஊழலையும் பெருமையாக நினைக்கும் இவர்களிடம் வேறு எதைத் தான் நாம் எதிர்பார்க்க முடியும்? என கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕