துபாய் லாட்டரியில் தமிழருக்கு ரூ.2.35 கோடி ஜாக்பாட்

துபாயில் உள்ள தனியார் நிறுவன லாட்டரி குலுக்கலில், திருநெல்வேலியைச் சேர்ந்த 41 வயது பீர் முகம்மது ஆதம் என்பவருக்கு ரூ.2.35 கோடி பரிசு அடித்துள்ளது. 2007ஆம் ஆண்டு முதல் அவர் துபாயில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக தனது நண்பர்களுடன் லாட்டரி வாங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இந்தநிலையில் தற்போது அவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. இந்த பணத்தை தனது குடும்பத்தின் எதிர்கால சேமிப்பிற்கும் பயன்படுத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி