விருதுநகர் மாவட்டம், ஜோகில்பட்டியை சேர்ந்தவர் முத்தமிழ்ச் செல்வி. இவர் வேறு யாருமில்லை எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் தமிழ்ப் பெண் என்ற சாதனையை படைத்தவர். அதுமட்டுமின்றி, அண்டார்டிகா கண்டத்தில் 16,000 அடி உயரமுள்ள மவுண்ட் வின்சன் என்ற சிகரத்திலும் ஏறி சாதனை படைத்துள்ளார். உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இவர் சாதனையை படைத்துள்ளார்.