தஞ்சாவூரில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற பெயரில் வருகிற 19ஆம் தேதி திமுக மகளிரணி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கிப்பட்டியில் 19ஆம் தேதி மாலை 4 மணிக்கு மகளிரணி மாநாடு நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: NewsTamilTV24x7