முதல்வர் விஜய்யால் ஏமாற்றம் அடைந்த தமிழ் மாணவர்கள்

டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் சிலையைத் திறக்காமல் முதல்வர் விஜய் திரும்பியது அங்குள்ள தமிழ் மாணவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி செல்லும் முதல்வர் அங்குள்ள ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருக்கும் திருவள்ளுவர் சிலையை திறந்துவைப்பார் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து திடீரென அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு விஜய் தமிழகம் திரும்பி வந்தார். இதனால் முதல்வர் சிலையை திறந்துவைக்க வருவார் என காத்திருந்த மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி