தமிழ் சின்னத்திரையில் நடிகைகளின் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பப் பிரச்னையால் கடந்த 3 மாதங்களுக்கு முன் 'சிறகடிக்க ஆசை' நடிகை ராஜேஸ்வரி மற்றும் தாயுடனான மனக்கசப்பால் 'துர்கா' நடிகை நந்தினி ஆகியோர் தற்கொலை செய்துகொண்டனர். இவர்களைத் தொடர்ந்து, ஒரு நாளுக்கு முன் 'கயல்' சீரியல் நடிகை சுபாஷினியும் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.