தமிழறிஞர் சுந்தரமூர்த்தி காலமானார்.. தமிழறிஞர்கள் இரங்கல்

தமிழ்நாட்டின் மூத்த தமிழ் அறிஞர்களில் ஒருவரான இ. சுந்தரமூர்த்தி (84) காலமானார். இவர், சென்னை பல்கலைக்கழகத்திலும் தமிழ் மொழி, இலக்கியத் துறை தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் 32 ஆண்டுகள் பணியாற்றினார். மேலும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றினார். சுந்தரமூர்த்தி சுமார் 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். அவரது மறைவுக்கு தமிழறிஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி