தமிழகத்தில் நீடித்து வரும் கோடை மற்றும் வறண்ட வானிலை காரணமாக 3 மாவட்டங்களில் (ஏப்., 13) 105 டிகிரி வெயில் கொளுத்தியது. தமிழகம், புதுச்சேரியில் தற்போது வறண்ட வானிலை நிலவிவருகிறது. அதேபோல் (ஏப்., 14) வெப்பநிலை இயல்பில் இருந்து 2-3 டிகிரி செல்சியசும், ஒரு சில இடங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரித்துள்ளது. வரும் 17ஆம் தேதி வரையில் அதிக வெப்பநிலை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பொதுமக்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அவசியமின்றி வெயிலில் நடமாட வேண்டாம்.